சுடு சோறு

குருட்டுச் சொப்பனம்

வண்ணமய மீன் என உனை
வலை வீசி பிடித்தேன்..
கண்கள் இமைப்பதற்குள்
கருப்பு வெள்ளை ஆனதென்ன...

அகலென ஏந்தியே உனை
இருளில் ஏற்றினேன்...
முகிலென மாறியே
இடியாய் முளைத்ததென்ன...

இதயத் துடிப்பென உனை
இடப்பக்கம் தாங்கினேன்...
இறுக்கி பிடிப்பதற்குள்
இரக்கமின்றி கொன்றதென்ன...

என் எதிர்காலம் நீயென
ஏதேதோ எழுதினேன்...
எழுத்து பிழை நீயென
அழித்துவிட்டு சென்றதென்ன...

என் அனைத்தும் நீயென
ஆரவாரம் கொண்டேன்...
வெறும் கானல் நீரென
கண்முன்னே மறைந்ததென்ன...

ஏழு ஜென்ம பந்தமென
ஏகாந்தம் தரித்தேன்...
எல்லாம் பொய்யென்று
கோலம் கலைத்து போனதென்ன...

கனவுக்குள் உனை
கடவுளாக்கி வணங்கினேன்...
கல்லெடுத்து எரிந்ததால்
இன்று சிலையாகி நிற்கிறேன்...

- மாலினி மோகன்

No comments

வரலாற்றில் இன்று: ஜூலை 25

1978: உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயிஸ் பிரவுண் பிறந்தது. 1983: வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன் உட்பட 37 தமிழ் அரச...