மலையக மக்களின் சுயதேவைக்கான உற்பத்தியின் அவசியத்தை உணரவைக்கும் கொரோனா.
மலையக மக்கள் பஞ்சம் என்ற ஓரு காலத்தை கடந்து தான் வந்திருப்பார்கள்.அல்லது பெரியவர்கள் சொல்லக்கேட்டிருப்பார்கள்
1973-1977 காலப்பகுதியில் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வின் மூடியபொருளாதார கொள்கை அடிப்படையில் உள்ளூர் உற்பத்திக்கான மூலோபாய திட்டங்களை மேற்கொள்ளுமாறு வழியுறுத்தப்பட்ட நிலையில் அச்சூழலுக்கு மலையக மக்கள் தம்மை தயார்படுத்திக்கொள்ளாத நிலையில் பெரும் பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
1973-1977 காலப்பகுதியில் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வின் மூடியபொருளாதார கொள்கை அடிப்படையில் உள்ளூர் உற்பத்திக்கான மூலோபாய திட்டங்களை மேற்கொள்ளுமாறு வழியுறுத்தப்பட்ட நிலையில் அச்சூழலுக்கு மலையக மக்கள் தம்மை தயார்படுத்திக்கொள்ளாத நிலையில் பெரும் பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
அது ஒரு நீண்ட சமூக,அரசியல் துன்பியல் நிகழ்வு.
நாம் மலையகத்தமிழர்கள் என்பது மட்டும் தான் பெரும்பாலானோர்களுக்கு தெரிந்திருக்கிற்தே தவிர நமக்குப்பின்னால் உள்ள ஒரு நீண்ட அவலம் நமது இளஞ்சந்ததியினருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை.
மலையகத்தைப் பொறுத்தவரையில் படைப்பிலக்கியங்கள் ஆகட்டும், விவாதங்களாகட்டும், அடுக்கு மொழி பேச்சுக்களாகட்டும்,அனைத்துமே அரசியல் மேடைகளிலும், மூடிய அறைகளுக்குள்ளுமே அதிகளவில் நடந்தேறி முடிகின்றன.
இளைய தலைமுறையினர், மாணவர்கள் எப்போது நம் சமூகத்தை ஊடுருவி பார்த்து இரத்தம் தோய்ந்த சகதியில் நம்முன்னோர்களின் உடலங்களின் மேல் முளைத்ததால் தான் தேயிலையின் சாயம் செந்நிறமாக இருக்கின்றது என்பதை உணருகின்றார்களோ அப்போது தான் அரசியல் , சமூகம் ,பொருளாதாரம் எல்லாமே மாற்றம் பெறும்.
அது நிற்க இப்போது மீண்டும் சுய உற்பத்திக்கான தேவையை,அவசியத்தை இந்த கொரோனா வைரஸ் கொண்டு வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சேமிப்பின் அவசியத்தையும் வழியுறுத்துகின்றது.
சந்தைப்படுத்தலுக்கான உற்பத்திகளாகவே மலையகத்து மரக்கறி உற்பத்திகள் பெரும்பாலும் இருக்கின்ற நிலையில் வீட்டு தோட்டங்களினதும், சுயதேவை பூர்த்திக்கான பயிரிடுதலும் ஊக்கப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது.
நாட்டு பகுதி என்று சொல்லப்படுகின்ற கிராமபகுதிகளில் மரவள்ளி, வற்றாளை, மிளகாய், கீரைகள், போஞ்சி, தக்காளி, உருளைக்கிழங்கு, வாழை என விளையகூடிய அனைத்தும் வீட்டு பயனுக்காக என்று வளர்க்கப்படுகின்றன. நாமும் அதனை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
நிலம் உள்ளதா என்றகேள்வி எழலாம்.பாருங்கள் மதுவிற்க்காக எத்தனை நிலங்கள் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன,விற்கப்பட்டிருக்கின்றன என்று,
கையளவு நிலமாயினும் சரி வீட்டு தேவைக்காக பயிரிடுங்கள். நுவரெலியா நகரை சுற்றியுள்ள ஒருசில கிலோமீற்றர் களுக்குள் தான் சில பயிர்கள் வளர்வது சற்று கடினமாயினும் அதனை தாண்டி சிறப்பாகவே வளர்கின்றன.
ஆசிரியதோழர்களே சுய பொருளாதார உற்பத்திகளை மாணவர் மத்தியில் ஊக்குவிப்போம்,அவர்களினூடாக பெற்றோர்களை வழிப்படுத்துவோம். வீட்டுதோட்டங்களையும் சேமிப்பையும் வளர்த்தெடுப்போம்.
பாடபரப்புக்குள் கட்டுண்டுகிடக்காமல் சமூகத்திற்காய் நாம் சேவையாற்றவேண்டிய காலமிது. இல்லையேல் சமூகம் பாழ்பட்டுப்போகும்.
சி.இரவிந்திரன்’
செயலாளர் நாயகம்.
செயலாளர் நாயகம்.
No comments